Friday, October 3, 2014

மணிமேகலை - 1

முன்னுரை-

வணக்கம்

இந்த வலைத்தலத்திற்கு வந்தமைக்கு மகிழ்ச்சி.


ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை.சிலப்பதிகாரம்.சீவக சிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி அகியவை மற்றவை ஆகும்.

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்த்து மணிமேகலை.சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணீமேகலை துறவறத்தையும் வலியுறுத்துவனவாகும்.ஆகவே இவற்றை இரட்டைக் காப்பியங்கள் எனலாம்.

மணிமேகலை இதனை இயற்றியவர் சீத்தலை சாத்தனார் ஆவார்.

இனி மணிமேகலையின் கதையை எளிய தமிழில், சிறிதும் சுவை குன்றாமல் சுருக்கி அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளேன்.

மாதவி, கொவலை இருவரின் புதல்வி மணிமேகலை என அனைவருமறிவோம்.

தற்குமேல் பலரும் மணிமேகலையின் கதை அறியார்.அவர்கள் படித்து இன்புற்றால்..இதை எழுதியதன் பயனை நான் அடைந்ததாக மகிழ்ச்சி அடைவேன்.

நன்றி..

அன்புடன்

டி.வி.ராதாகிருஷ்ணன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சோழ நாட்டு புகார் நகரம்.

அந்நகரில் மாசாத்துவான் என்ற வணிகனின் மகன் கோவலன்.கோவலனின் மனைவி கண்ணகி.கண்னகியோடு மகிழ்வோடு வாழ்க்கை நடத்தி வந்த கோவலன் அந்நகரில் வாழ்ந்து வந்த நடனப் பெண்மணியான  மாதவி என்பவளின் ஆடற்கலையில் மயங்கி, கண்ணகியைப் பிரிந்து சிறிது காலம் அவளுடன் வாழ்ந்தான்.அப்போது அவர்கள் இருவருக்கும் பிறந்த பெண் குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.சிறிது காலத்திற்குப் பின் கோவலன் , மாதவியிடம் ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக அவளைப் பிரிந்து கண்ணகியிடம் சென்று விடுகிறான்.

பொருள் ஈட்ட மதுரை மாநகர் சென்ற கோவலன், பாண்டிய அரசியின் சிலம்பு ஒன்றைத் திருடியவன் என்று அரண்மனைப் பொற்கொல்லனால் பழி சுமத்தப்பட்டுக் கொல்லப் படுகிறான்.அதனை அறிந்த மாதவி, தனது பொருட்களையெல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னால் தானம் செய்து விட்டு துறவறம் ஏற்றாள்.தன் பெண்ணான மணிமேகளையையும் துறவறத்தில் ஈடுபடுத்தினாள்.

மாதவி, மணிமேகளை இருவரும் துறவு பூண்டு வாழ்ந்து வரும் வேளையில் பூம்புகார் நகரில் இந்திரவிழா நடைபெற்றது.அவ்விழாவில் நாடகப் பெண்மணிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் முதன்மையானவை.மாதவியும், மணிமேகலையும்
அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.இதனால் ஊர்மக்கள் அவர்களைப் பற்றிப் பழித்து உரைக்கின்றனர்.ஊரார் பழிக்கவே, மாதவியின் தாயான சித்ராபதி, மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள்.

வயந்தமாலை மாதவியிடம் சென்று உரைக்கிறாள்.   ஆனால் மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறியதுடன் நில்லாது, மணிமேகலையை "மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்" என்கிறாள்.அவள் நாட்டியமாட மாட்டாள் என்கிறாள்.மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையையும் தெளிவாக உணர்த்துகிறாள்.

மாலையைத் தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலையிடம், மாதவி..கோவலன், கண்ணகி ஆகியவர்கள் பற்ரியும்..கோவலனுடன் தனக்கான உறவையும் கூறுகிறாள்.மாலைத் தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலை கண்ணீர் சிந்த, கண்ணீர் மாலையில் விழுந்து அதன் தூய்மை இழக்கிறது.


கோவலன்,  கண்ணகி,  மாதவி ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட துன்பங்களை மாதவி கூறியதைக் கேட்டு அங்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலை கண்ணீர் சிந்துகிறாள். கண்ணீர் படிந்து பூசைக்குரிய மாலை தூய்மை இழந்தது.

அதனால், புதிய மலர்களை பறித்து வந்து மாலை தொடுக்கும்படி மணிமேகலையிடம் மாதவி கூறுகிறாள். மணிமேகலையும், தன் தோழி சுதமதி என்பவளுடன் உவவனம் என்னும் சோலைக்குச் செல்கிறாள்.

(தொடரும்

No comments:

Post a Comment