மகளின் பிடிவாதத்தால், வேறு வழி அறியாத வணிகமணி மன்னனைக் காணச் சென்றார்
அவருக்கும், சோழனுக்கும் நல்ல பழக்கம் இருந்ததால், இரவானாலும், அவரை வரவேற்றான் மன்னன்
"இரவில் என்னைத் தேடி வந்துள்ளீர்கள்..நான் ஏதேனும் உதவ வேண்டுமா?" என்றான் மன்னன்
"நான் கேட்பதைத் தருவீர்களா?"
மன்னனும் தருவதாக வாக்களித்தான்.தன் நிலையை எடுத்துக் கூறி காளனை விடுவிக்கச் சொன்னார் வணிகமணி
மன்னனும், தான் அளித்த வாக்கைக் காப்பாற்ற அவனை விடுவித்தான்
பின், ஒரு நல்ல நாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது.காளனுக்கு ஏராளமான பொன்னும், மணியும், பொருளும் சீதனமாகத் தரப்பட்டது
ஆயினும், அவனுக்கு ஆசை விடவில்லை.தன் திருட்டுத் தொழிலை மீண்டும் தொடங்கினான்
குண்டலகேசி அவனைக் கண்டிக்க, அது பிடிக்கவில்லை அவனுக்கு.
ஒருநாள், அவளிடம்"நாம் மலையுச்சிக்குச் சென்று உல்லாசமாய் இருப்போம் வா" என்று சொல்லி மலையின் உச்சிக்கு அவளை அழைத்துச் சென்றான்
அங்கிருந்து, அவளை தள்ள முயற்சிக்க ,குண்டலகேசி சுதாகரித்துக் கொண்டாள்.பின் காலனிடம், "தங்கள் விருப்பம் இதுவானால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கு முன் கணவனை வலம் வரும் பெண்கள்
பாக்கியசாலிகள்.எனக்கு அந்த பாக்கியத்தை அளிக்க வேண்டும்:" என்றாள்
காளனும் சம்மதித்தான்.
அவனை இருமுறை வலம் வந்தவள், மூன்றாம் முறை வலம் வருகையில் அவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள்.காளன் உயிரிழந்தான்.
பின் குண்டலகேசி, தன் ஆசையே இதற்கெல்லாம் காரணம் என உணர்ந்து,. ஆசைகளை விட்டொழித்து புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பினாள் இறுதிகாலம் வரை.
(இளம் பெண்கள்..பெற்றோர் சொல் கேட்டு திருமணம் செய்து கொள்வதே பாதுகாப்பு என அன்றே இக்காவியம் உணர்த்துகிறது)