Tuesday, March 24, 2020

சிலப்பதிகாரம்- 6

கடல் ஆடு காதை

இந்திரவிழாவால்
இன்ப வெள்ளத்தில்
புகார் நகரம்
சித்திரை மாதம்
சித்திரை நாள்..
இந்திரன் அவையின்
சாபத்தால்
புகார் புகுந்த
ஊர்வசி மரபில் வந்த
அழகு தேவதை
மாதவியின் நடனம்
ஊர் கூடி
காத்திருக்க
அவர்களை 
தன்
பதினோருவகை ஆடல்களால்
பரவசப்படுத்தத்
தயரானாள் அவள்
மக்கள்
மாதவியைக் கண்டதும்
மகிழ்ச்சி வெள்ளத்தில்..
நடனம் முடிந்ததும்
கோவலனுடன்
ஒன்றினாள்..
பின்..
சிறு ஊடல்
ஊடல்தானே
உடல் ஒன்ற
மேன் மேலும்
இனபம் அளித்திடும்
ஊடல் தீர்ந்து
உள்ளக் களிப்பில்
கூடினர்..
இரவு முழுதும்
இன்ப வெள்ளத்தில்
இருந்தவர்..
வைகறையில்
காவிரியின்
கடல் கலக்கும்
சங்கமத் துறையில்
கடல் நீராடினர்
மாதவியின் தோழி
யாழெடுத்து
கோவலனின்
கரங்களில் தந்திட
யாழ் மீட்டவனுடன்
இசைப்பாடலானாள்
இன்முகத்துடன்
மனம் நிறைய
இச்சையுடன்
இன்ப நாயகி


Monday, March 23, 2020

சிலப்ப்திகாரம் - 5

இந்திரவிழா

---------------------------.


புகார் நகரின்

இந்திரவிழா

மருவூர்ப் பாக்கம்

பட்டினப் பாக்கம்

சார்ந்த பலவகை குடியினர்

ஐந்து மன்றங்களில்

பலிகளையிட்டு

வழிபடும்விழா

விழாக்களிப்பில்

ஊர் முழுதும்

கணவனோடு இணைந்து

மகிழும் மனைவியர்

சிறு சிறு ஊடல்

கொண்டு

கோபமுறும் தம்பதியினர்

பலவேறு கொண்டாட்டங்கள்

எங்கும் மகிழ்ச்சி

எதிலும் மகிழ்ச்சி

ஆயின்

கண்ணகியின் கருங்கண்

பிரிவுத்துயரால்

சோகத்தில்

கண்ணீரை விட

மாதவியின்

செங்கண்களோ

ஆனந்தக்கண்ணிரை

சிந்திட..

அவ்வேளைதனில்

இடக்கண் துடித்தது

நாயகிக்கு

வலக்கண் துடித்தது

ஆசை நாயகிக்கு..

Saturday, March 21, 2020

சிலப்பதிகாரம் - 4


அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை- 4
-------------------------------------------------------------
இன்பமும்
துன்பமும்
மாறி மாறி வருவதுதானே
சகட வாழ்க்கை
மாதவி வாழ்வில்
இன்பம்...
கண்ணகிக்கோ துன்பம்!
கோவலனுடன்
இணைந்து
இன்பத்தில்
மாதவி ..
அவனை பிரிந்து
துன்பத்தில்
கண்ணகி
மணாளனைப்
பிரிந்து
பசலையால்
படரப்பட்டு
செம்மலர்க் கண்களில்
நீர் வழிய
உடல் நடுங்கிய
மாலைப் பொழுது
கண்ணகியுடைத்து
கதிரவனானக்
கணவனைக் காணாது
தவிக்கின்றாள்
மாதவியோ
கதிர் விரிந்து
மாலையில் மலரும்
அல்லி மலராய்
கோவலக்
கதிரவனை
கண்டதால்..
மலர் முகத்தில்
மகிழ்ச்சியால்
இன்பத்துள்
மூழ்குகிறாள்




Friday, March 20, 2020

சிலப்பதிகாரம் - 3

அரங்கேற்று காதை

ஆடல்மகள்
மாதவி
தோகை வளர்ந்த
பெண் மயிலாள்
புள்ளிமானாய்த் துள்ளும்
நடன மங்கை
அழகின் இலக்கணம்
பார்ப்போர்
மயங்கும்
அழகுடையாள்
ஓர் நாள்
சோழ மன்னன் முன்
அரங்கேறி
ஆடி நின்றாள்
காவலனும்
அதற்கென நடைமுறையாய்
இயல்பு வழுவாது
பச்சை
மாலையினையும்
"தலைக்கோலி'"
பட்டத்தினையும் அளித்திட்டான்.
அம்மாலையினை
கூனி
பெருந்தெருவில்
விற்க வர
கோவலனும்
ஆயிரம் பொன் தந்து
வாங்கினதுடனின்றி,
மாதவியின்
இல்லமும் சென்றனன்
கூனியுடன்..
குற்றமற்ற
தன் மனையினையும்
மறந்து
மாதவியிடன்
மாலை
தங்குபவனும் ஆயினன். 

சிலப்பதிகாரம் - 2

ம்னையறம் படுத்த காதை :

மணத்தால் ஒன்றுபட்ட
மணமக்கள்
மனதாலும் ஒன்றுபட்டு
ஓருயிர்
ஈருடலாய்
தம்முட்கூடி
இல்லற சுகத்தை
இன்புற
அனுபவித்தனரே!
சில ஆண்டுகள்
இன்பமாய்
இல்வாழ்வு கழிந்திட
அவர்களை
தனிமனைக்கண்
பெற்றோர் 
இருத்தினரே!
இளம் வயது
அன்பு உயிர்கள்
உடலாலும்
உள்ளத்தாலும்
இல்லறமே நல்லறமாய்
குடும்வ வாழ்வுதனை
வாழத் தொடங்கினரே!


Thursday, March 19, 2020

சிலப்பதிகாரம் (புகார் காண்டம்) 1

மங்கல வாழ்த்துப் பாடல்[தொகு]

புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர்.

புகார் நகரினிலே
மாசாத்துவான்
மகன்
கோவலனுக்கும்
மாநாயகன்
மகள்
கண்னகிக்கும்
திருமணம்..
மணமகன்
அகவையோ 
பதினாறு
மணமகளுக்கோ
பன்னிரெண்டு
வயது முதிர்ந்த
அந்தணர்கள்
மந்திரம் சொல்லிட
மணமகன்
மங்கல நாணை
மணமகளுக்கு
பூட்டிட
மறைவழிகள்
முழங்கிட
தீயினையும்
அவளுடன்
அவன்
வலம் வர
கண்கள்
குளிர்ந்திட
மகிழ்ந்தனர்
புகார் மக்கள்.
மங்கல மகளிர்
மணமக்களையும் அவர்தம்
மன்னன்
செம்பியனையும்
வாயாற 
வாழ்த்தினரே!



Sunday, June 11, 2017

குண்டலகேசி - 2



மகளின் பிடிவாதத்தால், வேறு வழி அறியாத வணிகமணி மன்னனைக் காணச் சென்றார்

அவருக்கும், சோழனுக்கும் நல்ல பழக்கம் இருந்ததால், இரவானாலும், அவரை வரவேற்றான் மன்னன்

"இரவில் என்னைத் தேடி வந்துள்ளீர்கள்..நான் ஏதேனும் உதவ வேண்டுமா?" என்றான் மன்னன்

"நான் கேட்பதைத் தருவீர்களா?"

மன்னனும் தருவதாக வாக்களித்தான்.தன் நிலையை எடுத்துக் கூறி காளனை விடுவிக்கச் சொன்னார் வணிகமணி

மன்னனும், தான் அளித்த வாக்கைக் காப்பாற்ற அவனை விடுவித்தான்

பின், ஒரு நல்ல நாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது.காளனுக்கு ஏராளமான பொன்னும், மணியும், பொருளும் சீதனமாகத் தரப்பட்டது

ஆயினும், அவனுக்கு ஆசை விடவில்லை.தன் திருட்டுத் தொழிலை மீண்டும் தொடங்கினான்

குண்டலகேசி அவனைக் கண்டிக்க, அது பிடிக்கவில்லை அவனுக்கு.

ஒருநாள், அவளிடம்"நாம் மலையுச்சிக்குச் சென்று உல்லாசமாய் இருப்போம் வா" என்று சொல்லி மலையின் உச்சிக்கு அவளை அழைத்துச் சென்றான்

அங்கிருந்து, அவளை தள்ள முயற்சிக்க ,குண்டலகேசி சுதாகரித்துக் கொண்டாள்.பின் காலனிடம், "தங்கள் விருப்பம் இதுவானால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கு  முன் கணவனை வலம் வரும் பெண்கள்
பாக்கியசாலிகள்.எனக்கு அந்த பாக்கியத்தை அளிக்க வேண்டும்:" என்றாள்

காளனும் சம்மதித்தான்.

அவனை இருமுறை வலம் வந்தவள், மூன்றாம் முறை வலம் வருகையில் அவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள்.காளன் உயிரிழந்தான்.

பின் குண்டலகேசி, தன் ஆசையே இதற்கெல்லாம்  காரணம் என உணர்ந்து,. ஆசைகளை விட்டொழித்து புத்தரின்  போதனையை உலகெங்கும் பரப்பினாள் இறுதிகாலம் வரை.

(இளம் பெண்கள்..பெற்றோர் சொல் கேட்டு திருமணம் செய்து கொள்வதே பாதுகாப்பு என அன்றே இக்காவியம் உணர்த்துகிறது)